பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 207


 டேப்லெட்ஸ் சாப்புடுறாங்க. ஆனால் இவங்களால ஆபத்து கிடையாது. இந்த ஜூஸ்களைக்கூட இவர்கள்தான் பிழிந்தார்கள். பிளிஸ், டேக் தெம்."

சமூக சேவகிகள் திக்குமுக்காடிப் போனார்கள். ஒருத்தி அந்த வெள்ளிக்கிழமையில் சனிக்கிழமை விரதம்' என்றாள். இன்னொருத்தி கோல்ட் பிடிச்சிருக்கு என்றாள். மிஸ்ஸஸ் ராம்நாத்துக்கு ஜூஸ் அலர்ஜியாம். அவசரப்பட்டவர்கள் போல், "இந்தாங்க பணம். ரசீத அப்புறமா அனுப்பிடலாம். வி ஹேவ் சம் எங்கேஜ் மென்ட்” என்றாள் மிஸ்ஸஸ் டி. ஸாஸா,

ஒரு டம்ளரை எடுத்து ஜூஸைக் குடித்துக்கொண்டே “தேவைப்படும்போது வாங்கிக்கிறேன். தேங்யூ எங் லேடீஸ், குட் பை!" என்று சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தார் அந்த மூதாட்டி அவர்கள் எழுந்தார்கள். அவசர அவசரமாகக் காரில் ஏறிப் பறந்தார்கள். பணத்தை வாங்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பத்திரிகைகளில் தங்களின் போட்டோக்களுடன் செய்தி கொடுத்து விட்டு இப்போது அந்த செய்தியை நிறுத்துவதற்காக இப்போது நிற்காமலே ஒடினார்கள். திஸ் இஸ் எ வெரி பேட் இன்ஸ்டிடியூஷன். வி வில் நெவர் கம். கம் ஒட் மே.'

அந்த மூதாட்டி வியப்போடு பார்த்த மணிமேகலையை நோக்கி "முந்நூறு ரூபாய் துண்டு விழுதேன்னு சொல்லிட்டு நானூறு ரூபாயை ஏன் வாங்கலன்னு நினைக்கிறியா? இந்த யங் லேடீஸ் தாங்கள் சமூக சேவை' செய்யனும் என்கிறதுக்காகவே, எங்கயாவது குடிசைகளில் தீப்பிடிக்காதா யாராவது நடு ரோட்ல சாகமாட்டாங்களான்னு நினைக்கிற சேடீஸ்ட்ஸ். இவங்ககிட்ட பணம் வாங்குறது நாம இவங்களையே கெடுக்கிறது மாதிரி. டு யூ அண்டர்ஸ்டாண்ட் மை டாட்டர் ?”