பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் வயிற்றில் பிறந்து, மடியில் தவழ்ந்து இன்பம் விளைவிக்கும் எழிலோவியமான குழந்தை யைத் தாய் கொஞ்சி மகிழ்ந்து வாழ்த்துக் கூறுகிருள். 1. இன்பம் தரப் பிறந்த எழிலோவியமே. இன்பம் உலகம் எனமணத்தில் எண்ணும் பேற்றைத் தரப்பிறந்த அன்பே கட்டிக் கரும்பே நல் அமுதே என்றன் ஆருயிரே அன்னை என்னும் நிலேயெய்தி அகம்பூ ரித்து மகிழ்கின்ற என்ம டிக்குச் சிறப்பளிக்கும் எழிலோ வியமே வாழியவே. கோடித் தவங்கள் செய்தவரும் கும்பிட் டன்பாய்ப் பலகடவுள் நாடிக் குறையைச் சொன்னவரும் நல்ல பிள்ளைப் பேறெய்தி ஆடிக் களியா உலகத்தில் அம்மா என்று குரலெழுப்பி நீடிய இன்பம் தரப்பிறந்த நித்தில மேரீ வாழியவே! வயிறு பசித்தால் அழுதிடுவாய் வந்தின் னமுதம் குடித்திடுவாய் உயர்ந்த பட்டுத் தொட்டிலிலே உறங்கி விழித்துச் சிரித்திடுவாய் அயர்ந்த மனத்தில் தெம்பேற்றி அன்பு விளங்க வைத்திடுவாய் உயிரோ வியமே என்னகத்தின் ஒளிவி ளக்கே வாழியவே! 116