உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளர் நடை பயிலத் தொடங்கிய தன் பிள்ளே ஒழுங்காக நடந்து பழக உதவியாக நடை வண்டி கொண்டுவந்து கொடுத்த அன்னை, அவன் வண்டி தள்ளும் அழகைக் கண்டு மகிழ் கிருள். விரைவில் தன் மகன் வண்டியின் துணையில்லாமலே நடந்து வரும் அழகைக் காணத் துடிக்கும் அவள் நடைவண்டியை வேகமாகத் தள்ளி விரைவாகப் பயில வேண்டு மென்று துடிக்கிருள். 18. விரைந்து தள்ளு நடைவண்டி. வளர்ந்து வருமென் கற்பகமே வண்ணச் சுடரே ஓவியமே தளர்ந்த நடையும் சீராகத் தள்ளு வண்டி நடைவண்டி விளேந்த அன்பால் உன் தந்தை விலைக்கு வாங்கிக் கொடுவந்தார். அழுந்தத் தள்ளி நடைபயில்வாய் அன்பே நன்கு நடைபயில்வாய், தவழ்ந்து வந்து மடியேறித் தழைத்த இன்பப் பொன்மலரே தளர்ந்த நடைநீ பயிலுங்கால் தடுமா றிப்போய் வீழ்வதனேக் கொழுந்தே என்றன் குலவிளக்கே கொஞ்சங் கூடத் தாளேன்.நான் எழுந்து தள்ளு நடைவண்டி. இனிது தள்ளு நடைவண்டி ஆளே மயக்கும் சிரிப்புடையாய் அள்ளிக் கொள்ளத் துடிக்கின்ற பேழைச் செல்வம் போன்றவனே பேரின் பத்தை வளர்ப்பவனே காளே நடைநீ பயின்றிடவே கையால் தள்ளு நடைவண்டி விழா திறுகப் பிடித்தபடி விரைந்து தள்ளு நடைவண்டி. அச்சிடுபவர், வெளியிடுபவர், ஆசிரியர் : நாரா நாச்சியப்பன், நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ், 202, ஜானி ஜான் கான் தெரு, சென்னை-14. - 6000.14 - தொலே பேசி எண் : 82781