பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இளமையின் நினைவுகள் கேட்டு வாங்குவார். அப்படிப் பணம் வாங்கி, எங்கள் ஊரில் பெரிய பணக்காரர் என்னுமாறு அவர் வாழ்ந்து வந்தார். ஆல்ை இன்று அவர் பிள்ளைகள் அந்த முறைகளிலெல்லாம் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள். ஊரிலும் யாரும் அவர்களிடம் பாண்டுப் பத்திரம் எழுதச் செல்வதில்லை. நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த அந்த நாளிலே ஓர் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தேன். எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பத்திரம் எழுதவேண்டும் என்று சொன்னர். அவர் கணக்கப்பிள்ளையிடம் போல்ை அவருக்குப் பத்துப் பதினைந்து ரூபாய்கள் த ர வே ண் டி இருக்குமென்றும், ஆகவே என்னையே எழுதித்தர வேண்டும் என்றும் சொன்னர். நான் அப்போது வயதில் இளையவதை லாலும்,அவ்வாறெல்லாம் எழுதிப்பழக்கப்பட்டவன் அல்லன் ஆதலாலும் அவ்வாறு எழுத இசையவில்லை. உடனே அவர் என் அம்மாவிடம் சென்று முறையிட்டார். அவருக் குச் சாதகமான முறையில் சில சொன்னுர். 'பாருங்கள். உங்கள் பிள்ளையைப் பத்தாவது வரையில் படிக்க வைக்கி lர்களே, என்ன பிரயோசனம்? ஒரு பத்திரம் எழுதத் தெரியவில்லையாம். படிப்பதைக் காட்டிலும் பேசாமல் வீட்டிலேயே இருக்கலாம் என்ருர், எனது அன்னையாருக்கு யாராவது எ ன் னை த் தாழ்த்திப் பேசில்ை பிடிக்காது. அவர்கள் உடனே கோபம் கொண்டு என்னை அழைத்து "அவர் சொல்வது மெய்தானு?’ என்ருர்கள். நான் "ஆம்" என்று சொல்லி மேலும் பேசினேன். அந்த மாதிரி எழுதுவது கூடாது'என்றேன், நான் சிறியவனதலால் எழுது வது முறைப்படி தவறு என்றேன். என்ருலும் அன்னையார் கேட்கவில்லை ‘உன்னைப் படிக்க வைத்தும் எ ழு த த் தெரியாதவன் என்று சொல்லுகிருர்களே, அதற்காவது நீ எழுதிக்கொடுக்க வேண்டாமா? வெட்கமாக இல்லையா