பக்கம்:ஈச்சம்பாய்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஈச்சம்பாய்


பாண்டியாவின் பாடல் உச்சக்கட்டத்திற்கு போனபோது, மோட்டார் பைக்கும் உச்சத்திற்குப் போனது. பிறகு ஆமை போல் ஆனது. அந்த வண்டிக்குப் பின்னால் வந்து முன்னால் போய்க் கொண்டிருந்த கார்க்காரன் வண்டியை நிறுத்தியபடியே கத்தினான். அசல் நோஞ்சான். ஊதினால் பறப்பான் என்பார்களே - அப்படி.

‘உனக்கு மூளை இருக்குதா மேன் -- புதுசா வண்டி ஓட்டுறியா. இல்ல இந்த பொண்ணு புதுசா?’

கார்க்காரன் பேசி முடித்துவிட்டு, வண்டியை வேகப்படுத்த போனபோது, பாண்டியா தனது மோட்டர் பைக்கை இடது பக்கமாய். ஒடித்து அந்த காருக்கு சாலைத் தடையை ஏற்படுத்தியவாறே. சினிமாக் கதா நாயகன் போல ஒரு சிகரெட்டை எடுத்து, நிதானமாக பற்றவைத்து, கார்க்காரனை பாராததுபோல் பார்த்தான். பிறகு ஒரு சினிமாவில் இதே சூழலில் கதாநாயகன் பேசிய டயலாக்கை அப்படியே ஒப்பித்தான்.

‘ஏண்டா டேய்! இடது பக்கம் ஓவர் டேக் செய்யக்கூடாதுன்னு தெரியாதவங்க, ஏண்டா கார ஓட்டி ரோட்டை இம்சிக்கிறீங்க? ஒருத்தன்கூட, ஒரு பொண்ணு போயிடக்கூடாதே - அதுவும் இந்தமாதிரி அழகான பொண்ண ஒரு ஆணோட ஜோடியாப் பார்த்தால் போதுமே. வயித்தெரிச்சல் வந்துடுமே... போகட்டும்... யோவ் பெரிக... இப்போ நீ என்னோட காதலிகிட்ட மன்னிப்புக் கேக்கிறே. இல்லாட்டி-- இந்த மோட்டர் பைக்காலேயே உன் கார அடிச்சு நொறுக்குவேண்டா மச்சி’

கார்க்காரன் பயந்துவிட்டான். ‘சாரி சார். சாரி மேடம்...’

ஏத்துக்கிட்டோம். எடுடா வண்டியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/40&oldid=1371906" இலிருந்து மீள்விக்கப்பட்டது