பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


தமிழ் உமது முரசாகட்டும்! பண்பாடு உமது கவசமாகட்டும்! அறிவு உமது படைக்கலனாகட்டும்! அறநெறி உமது வழித்துணையாகட்டும்! உறுதியுடன் செல்வீர்! ஊக்கமுடன் பணிபுரிவீர்! ஏற்ற மிகு வெற்றியினை ஈட்டிடுவீர்! பாட்டுமொழியுடைய நமது தாயகம் வாழ தரணிக்குத் துணை நின்றிடும் தகுதி பெறச் சென்றிடுவீர்! வென்றிடுவீர்!