பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

உண்மையை உணர்ந்திருந்தால்
ஊர்ச் சண்டை ஏது?

யிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய ஜைன நெறியை நல்ல முறையில் பாதுகாத்து, அந்த நெறியிலேயே நடப்பது மட்டுமல்லாமல் மற்ற சமுதாயத்தினரும் அந்த நெறியிலே நடந்து வாழ்ந்து சிறக்க வேண்டுமென்பதிலே அக்கறை காட்டுகின்றவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மகாவீரர் போதித்த தத்துவங்கள் நல்ல மார்க்கங்களாகும்--நல்ல நெறிகளாகும்.

"ஐம்புலன்களை அடக்கு--பொருள்களின்மீது ஆசைவைக்காதே" என்றெல்லாம் இங்கு எழுதியிருப்பதைக் காண்கிறேன். இந்த உண்மைகளையெல்லாம், உணமையிலேயே உலகில் உள்ளோர் அறிந்து உணர்ந்திருப்பரேயானால், சண்டைச் சச்சரவுகள் ஏற்பட்டிருக்காது. ஐக்கிய நாடுகள் மன்றமும் தேவைப்பட்டிருக்காது.

மனித சமுதாயத்தை வழி நடத்தும் மார்க்கங்கள் எல்லாம் நான்கு மாடிக் கட்டிடங்களாக உள்ளன என்றாலும், இரண்டு மூன்று மாடிகளுக்குத்தான் ஒழுங்கான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மாடியிலிருந்து அடுத்த மாடியைப் பார்த்தால், தொங்குகிற நூல் ஏணியில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

ஜைன மதத்தை அறிந்த அறிஞர்களிடமும், பெரியவர்களிடமும் எனக்கு நெருங்கிய தொடர்பும், பழக்கமும், உண்டு. ஜைன சமயம் பற்றிப் பல தடவை நாங்கள் விவா-