பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீக்கியர் மாண்பு


குருகோவிந்த சிங்கின் 301-வது பிறந்த நாள் புனிதத் தன்மையுடைய நாளாகும்.

சமூகத்தாரிடையே தோழமையையும் உறுதியையும் வளர்த்ததோடு சீக்கிய சமூகம் பிறருக்குப் பணி செய்யவேண்டுமென்பதையும் போதித்தது.

அமிர்தசரசில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு நான் 3-4 தடவைகள் போயிருக்கிறேன். அந்த கோவிலுக்குள் சென்று வரக் கூடிய எவரும் சீக்கிய மதத்திடம் மிகுந்த மரியாதையுடனே திரும்புவர். அத்தனை நேர்த்தியாகவும்சுத்தமாகவும். அக்கோயில் வைக்கப்பட்டுள்ளது.

அக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது அங்கே நான் ஒரு காட்சியைக் கண்டேன். நன்றாக உடுத்தியிருந்த ஒருவர் அக்கட்டிடத்தின் தாழ்வாரங்களை எல்லாம் சுத்தம் செய்ததோடு அங்கிருந்த காலணிகளையெல்லாம் துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஏனென்று நான் அவர் அருகில் சென்று கேட்டேன். பண்புகள் எல்லாவற்றிலும் தன்னடக்கமே மிக உயர்ந்த பண்பு என்பதைச் செயலால் உணரவே இவ்வாறு செய்கிறேன் என்று அவர் சொன்னார்.

சீக்கிய மதமானது மக்கள் அமைதி கிடைக்காதா என்று கேட்டு வாழ்க்கையின் மீதே வெறுப்புற்று இருந்த காலத்தில் தோன்றியது.

தங்களது மக்கள் ஒரு சமுகமாகக் கூடிப்பிணைந்து வாழவும் மக்கட் சமுதாயத் தொண்டினுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவுமே சீக்கிய சமயம் தோன்றிற்று--