பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சிக் கனல்


பெரியார் அவர்கள் செல்வக் குடியில் பிறந்தவரானாலும், தமக்குள்ள சுக போகங்களையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு, இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், இந்த நாட்டு மக்களின் நலிவினைப் போக்கி, அவர்களின் நல்வாழ்விற்காகவும் தன்னை ஒப்படைத்தவராவார்.

அவர் இந்த நாட்டுக்கு ஆற்றிய தொண்டு இங்கே ஏற்படுத்திய புரட்சிக்கனல்--அறிவுப்புனல், எவரும் எங்கும் காணாத ஒன்றாகும். அவர் ஏற்படுத்திய பகுத்தறிவுப் புரட்சியை நாம் வேறு எங்கும் கண்டதில்லை.

அவர் பல போராட்டங்களை வென்றவர். எதிர்த்து வரும் எதிர்ப்புக்கு மூலபலம் எங்கே இருக்கிறது என்று தெரிந்து அதனைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும்.

1935--37-ல் அவர் தொடுத்த போராட்டத்தின் விளைவால் தான் ஆட்சி மொழி என்று சொல்லி வந்த இந்தி மொழியை இணைப்பு பொழி என்றழைக்க ஆரம்பித்தார்கள்.

இந்தி ஆட்சி மொழி என்று அவர்கள் சொன்ன நேரத்தில், ஆட்சிமொழி இருக்கட்டும், உன் ஆட்சியின் லட்சணமென்ன என்று துணிவோடு கேட்டதை நாமறிவோம். தேசியமொழி என்ற தகுதியிலிருந்து மாறி, இந்தி இணைப்பு மொழி என்று அவர்கள் கூறுகின்ற நிலைமைக்கு இறங்கி வந்ததற்கு காரணம் பெரியார் எடுத்துக் கொண்ட போராட்டம் தான்.

அதை மறுப்பவர்கள் தமிழராக இருக்க முடியாது. காட்டு மிராண்டித்தனமான கொள்கைகளை விட்டு விட்டு, மனிதன் மிருகத்தனத்திலிருந்து நீக்கப்பட்டு, பகுத்தறிவுள்ள-