பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

லிற்று! அந்தத் தூய உணர்ச்சியை--தூய நோக்கத்திற்காக நாமும் பெறுவதற்குத்தான் இந்த விழா!

சுதந்திரம் பெறுவதுகூட எளிது; பெற்ற சுதந்திரத்தைக் காப்பதுதான் பெரிது! அதற்காக நமது நினைப்பை அறிவை--ஆற்றலை--வீர உறுதியை ஒப்படைக்க வேண்டும்.

சீனம் படையெடுத்த போது அந்த வீர உறுதியை இந்த நாடு காட்டியது. இந்த நாடு நம்முடையது; இந்த நாட்டுச் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டியது--சுதந்திரத்தின் முழுப்பயன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என உறுதி எடுக்கும் விழா இந்த விழா!

1947 ஆகஸ்ட் 15ஆம் நாளில் வந்த முதல் சுதந்திர நாள்--கணக்குத் தீர்த்த நாள்! நமக்கும் நம்மை ஆண்ட வேற்று நாட்டவனுக்கும்--நமக்கும் நம்மை அடிமையாகக் கொண்டவனுக்குமுள்ள கணக்குத் தீர்த்த நாள்.

ஆனால், 1967> ஆகஸ்ட் 15ஆம் நாளில் வந்த இந்த சுதந்திர தின விழா கணக்குப் பார்க்கும் நாள்! பெற்ற சுதந்திரத்தால் பெற்ற பயன் என்ன?--என்பது பற்றிக் கணக்குப் பார்க்கும் நாள் இந்த நாள்!

குழந்தை கருவிலிருந்து வெளியாகிக் கீழே விழுந்ததும் கறுப்பா; சிவப்பா--என்று பார்த்து அகமகிழ்வது முதற்கட்டம்! பிறர் எள்ளி நகையாடாதபடி துள்ளி விளையாடி, மழலை மொழி பேசி--அந்த மழலை குழலையும் விஞ்சக் கூடியது என்ற வள்ளுவர் மொழியை மெய்ப்பித்துக் காட்டுவது அடுத்த கட்டம். இந்தக் கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இப்படிப் பெரிய கணக்குப் பார்க்கும் இந்த வேளைவில் சில்லறைக் கணக்கைப் பார்க்க என் மனம் ஒப்பவில்லை. அவர்கள் செய்வதைச் சில்லறைக் கணக்கில் மட்டும் சேர்க்கவில்லை.. 1967 - பிப்ரவரியிலேயே பைசல் செய்யப்பட்ட