பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஆனால், இரண்டாவது முறையாக அமைக்கப்பட்ட குன்ஸுரு கமிட்டி, 1964ம் ஆண்டு மேலும் ஒரு புதிய பரிந்துரையை வழங்கியது. * கல்லூரி மாணவர்கள் விரும்பினால் தேசிய மாணவர் படையில் சேரலாம். இதில் சேர்ந்ததற்காக தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதில் எந்தவிதமான சலுகைகளையும் வழங்கக் கூடாது என்பன போன்ற விதிகளையும் இணைத் திருந்ததால், முன்போல இந்த இயக்கம் எழுச்சி பெற முடியாமற் போயிற்று. துணை தேசிய மாணவர் படை (Auxiliary Cadet Corps) கல்லூரி மாணவர்களின் தேசிய மாணவர் படைபோல, பள்ளிகளிலும் சிறுவர் தேசியப்படை ஒன்று 1952ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தேசிய மாணவர் படைக்குத் துணைப் படைபோல இந்த இயக்கம் அமைக்கப்பட்டது. தேசிய மாணவர் இயக்கம் இராணுவ அமைப்புத் தலைமையில் இயங்கியது. ஆனால் ஆக்சிலரி இயக்கம் கல்வி முறை வழக்கத்தில் பயிற்சியை வழங்கியது. - இராணுவப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பற்றாக் குறையாக இருந்ததும், இப்படிப்பட்ட துணைப்படை அமைக்கும் நோக்கத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. இராணுவப் பயிற்சிகளில் நன்கு கற்பிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களே, ஆக்சிலரி மாணவர் படையை இயக்கிநடத்தும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். - இந்த இயக்கத்தின் நோக்கங்களாவன.