பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309



கலைப் பணி

சஞ்சு கலை பண்பாட்டுச் சங்கம் என்னும் தனது நிறுவனம் மூலம். இந்திய நாட்டின் பழம் பெரும் கலையான பரதநாட்டியம், கர்நாடக இசை, நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புற நடனம் மற்றும் அனைத்து விதமான வாத்தியக் கருவிகளையும் ஒரு இடத்தில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வாயப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுநாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற நடனம் இரண்டு பிரிவிலும் போட்டிகளை நடத்தி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசப் பற்றை வளர்க்கும் தேச பக்திப் பாடல் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி தேசபக்தியை வளர்க்கவும் துணைபுரிந்தார்.

ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இளம் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இளைஞர் கலை விழா (Teen Arts Festival) என்னும் விழாவை நடத்தி 13 வயது முதல் 19 வயது வரையிலான இளம் கலைஞர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி 1 மணி நேரம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

நவம்பர் மாதத்தில் அனைத்து விதமான கலை சம்மந்தமான போட்டிகளில் 5 வயது முதல் 19 வயதுவரையில் மூன்று வயதுப் பிரிவுகளில் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி கலை வளர ஊக்கம் அளித்து வந்தார்.