பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்படையான் செத்தபோதே, அல்லலுற்ற கஞ்சி. ஆம்படையான செத்தவளுக்கு, மருத்துவச்சி தயவேன்? ஆம்படையான் செத்து ஆவி பறக்கச்சே. அசல் வீட்டுக்காரன் அக்குள் பாய்ச்சுகிறன். ஆம்படையான பலனுண்டானால், குப்பையேறிச் சண்டை போடலாம். ஆம்படையான் வைதத்தைப்பற்றி, அசல் வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்தச் சொன்னாளாம்! ஆய உபாயமறிந்தவன், அரிதல்ல வெல்வது. ஆயக்காரனுக்கு, பிரமத்திக்காரன் சாக்ஷி. ஆயத்திலும். ஞாயமாய்ப் போகவேணும். ஆயத் துறையில், அநியாயஞ் செய்யாதே. ஆய வஞ்சனை பிறர் வஞ்சனை, ஒருவருக்கு மாகாது. ஆயன் அமைப்பை, ஆராலுந் தள்ளக் கூடாது. ஆயிப்பார்த்த கலியாணம், போய்ப் பார்த்தாற் றெரியும். ஆயிரக்கல நெல்லுக்கு, ஓர் அந்துப்பூச்சி போதும். ஆயிரங்கட்டு, அண்டத்தைத் தாங்கும். ஆயிரங்கட்டு, ஆனைப்பலன். ஆயிரங்காக்கைக்குள், ஒரு அன்னம் அகப்பட்டது போல். ஆயிரங்குணம், ஒரு லோப குணத்தாற்றட்டும். ஆயிரங்குதிரையை அறவெட்டின சிபாய் (இப்போ ) பறைச்சேரி நாயோடே பங்கமழிகிறான். ஆயிரங்கோவிந்தம் போட்டாலும், அமுது படைக் கிறவனுக்கல்லோ தெரியும் வருத்தம். ஆயிரஞ் சொல்லுக்கு, அரையெழுத்து. ஆயிரஞ் சொன்னாலும், அவிசாரி சமுசாரியாகாள். ஆயிரத்திலே பிறந்து, ஐந்நூற்றிலே கால் நீட்டினது போல. ஆயிரத்திலொருவனே, அலங்கார புருடன். ஆயிர நக்ஷத்திரங் கூடினாலும், ஒரு சந்திரனாகாது. ஆயிரமாகாணி, அறுபத்திரண்டரை. ஆயிரமுடையார் அமர்ந்திருப்பார், துணி பொறுக்கி தொந்தோம் தொந்தோ மென்று கூத்தாடுவான். ஆயிரம் அரைக்காற் பணம். ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக்கொண்டால், நஷ்டமா?