பக்கம்:எழிலோவியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22


3



 முதிர்பலாத் தூக்கி மந்தி
முழவார்க்குந் தொம்பப் பெண்ணின்
புதுக்குரல் காட்டும்; குட்டி
புடைசூழும்; கடுவன் சாரல்
அதிர்ந்திடக் கத்தும்; ஓடிக்
கழைஏறி ஆடுங் கூத்தே !
எதிர்ஒலி கேட்டு மான்கள்
இருசெவி தூக்கி அஞ்சும் !

4


நாரையின் காலை வெட்டி
நறுக்கிய மணியும், பூத்த
கோரையும், நரியின் பல்லும்
கோத்தணி குறிஞ்சிப் பெண்கள்
சாரலில் தழைத்த ஆலின்
வீழ்தேறி ஊசல் ஆடப்
பார்த்தேங்கும் மந்தி; நீண்ட
பாறைமேல் தோகை ஆடும் !

5


பூவினைக் கொய்து நின்ற
பூவையைப் புதரில் பார்த்துச்
சாவோலை அனுப்ப, வில்லைத்
தாங்கினான் வேடன் ! 'அம்பை
ஏவாதே! அந்தப் பூவை
எதிர்வீட்டுப் பூவை!' என்று
கூவினாள் குரலைக் கேட்டும்,
மலையே!நீ சிரித்தி டாயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/23&oldid=1301961" இலிருந்து மீள்விக்கப்பட்டது