பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிஞ்சு நெஞ்சு

டாக்டர் ரங்கசாமிக்கு அறந்தாங்கியில் நல்ல பெயர். கைராசிக்காரர். இவருடைய பெயரைக் கேட்டாலே, நோய் ஓடிவிடும். நோயாளிகள் பெரு வாரியாக இவரது மருத்துவனையைத் தேடிக் கொண்டு வரத் தொடங்கினார்கள்.

ஆனால், டாக்டர் முன் கோபக்காரர், நோயாகளிடம் சிடு சிடு வென்று எரிந்து விழுவார்.

இப்படிப் பேசினால், நோயாளிகளுக்கு அமைதி கிடைக்குமா?

நோயைத் தீர்க்கும் வல்லமை பெற்றிருந்த இந்த டாக்டருக்கு தம் கோபத்தை ஆற்றிக்கொள்ள மட்டும் தெரியவில்லை!

டாக்டர் ரங்கசாமிக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. அதற்கு வயது ஒன்பதுதான் இருக்கும். செல்லப் பெண். அவள் பெயர்: பூங்கோதை.

பூங்கோதையிடம் அவள் அப்பாவின் முன் கோபத்தைப் பற்றிச் சொல்லி இரண்டொரு. நோயாளிகள் வருத்தப்பட்டார்கள்.