பக்கம்:ஓங்குக உலகம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

ஓங்குக உலகம்


கழி பொருள்களும் ஒருவேளை கிடைப்பதற்கு அரிய வாக நிற்க, (அவற்றின் மாற்றுப் பொருளாக) புதிதாக நார்ப் பொருள்களும் மரப்பட்டைகளும் பிற செடிகளும் மூலப் பொருளாக அமைய, காகிதம் அதிக தேவைக்கு ஏற்ற வகையில் அதிகமாகத் தயாரிக்கும் முறையினை மேற்கொண்டிருக்கலாம்.

நாரியல் உள்பட்டை உடைய சணல் வகைச்செடி, ஆளிவிதைச் செடி, ராமி என்னும் சீனப்புல், பிரம்பு ஆகிய செடிகளின் நார்ப்பட்டைகளும், முசுக்கட்டை, தான்மல்பரி போன்ற மரங்களின் அடிப்பட்டைகளும் மூங்கில், நாணல் போன்ற புல்களும், அரிசி கோதுமை ஆகியவற்றின் தவிடு உமிகளும், பருத்தி விதை போன்றவையுமே சீனத் தாள் செய்வதற்குரிய பெரும்பாலான பொருள்களாகக் கொள்ளப்பெற்றன. சிறந்த நல்ல நீண்ட நார்த் திரளைத் தரும் சணலும் பருத்தியும் உயர்ந்ததாகக் கருதப்பெற்றன. ஆயினும் அவை இரண்டும் ஆடை நெசவுக்கு இன்றியமையாப் பொருள்களாகக் கருதப்பட்டமையின், தான்மல்பரி (முசுக்கட்டை) மூங்கில் போன்றவையே காகிதம் செய்யத் தக்க முலப்பொருள்களாகச் சீனத்தில் பலநூற்றாண்டுகள் கொள்ளப்பெற்றன.

தாள் தோன்றிய நாளிலிருந்தே எழுது பொருளாகப் பயன்பட்டு வந்ததெனினும், மூங்கிலும் மரப்பலகைகளும் நூல்களுக்கெனப் பயன்படுத்திவந்த நிலையைத் தாள் மாற்றிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இல்லை எனலாம். இக்காலத்திலிருந்தே நல்ல செவ்விய முறையில் அளவிட்டு, வரையறுத்து, உருவச்சில் அமைத்து எழுதுவதற்கேற்ற நல்ல முறையிலும் என்றும் நிலைக்கும் வகையில் பூச்சிகளால் தின்னப்படா தவகையிலும் காகிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/135&oldid=1127722" இலிருந்து மீள்விக்கப்பட்டது