பக்கம்:ஓங்குக உலகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

ஓங்குக உலகம்


அதிலிருந்து காவிரி புறப்பட்டது என்பதே அக் கதை. எனினும் தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்பதும் வாதாபியிலிருந்து சிறுத்தொண்டரே அவ் விநாயகர் வழி பாட்டைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து, தன் ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் ‘கணபதிச்சுரம்’ என்றே கோவில் கட்டி வழிபட்டார் என்பதும் வரலாறு கண்ட உண்மை. அதுவும் மாற்றுச் சமயத்தவராகிய சமண, பெளத்தரை நீக்கி அவர்தம் ‘அரச மரத்தடி’யில் விநாயகரை நிறுத்திச் சைவ சமயத்தை வாழ்வித்தார் என்பர். எப்படியாயினும் காவிரி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்களிலும் பிறநாட்டார் எழுத்துக்களிலும் பேசப் பெறுகின்றமிையின் அக் கருத்து ஏற்கக் கூடியதன்று. நில நூல் வழியாகக் காணினும் அக் கருத்து ஏற்கக் கூடியதன்று. எனவே வட நாட்டு அகத்தியர் கோதாவரிக்கரையில் பஞ்சவடியில் தங்க, தென்னாட்டுத் தமிழ் அகத்தியர் பொதிய மலையில் இருந்து தமிழ் வளர்த்தார் என்று கொள்ளுவதே பொருந்தும். இந்த உண்மையைக் கம்பராமாயண சான்று கொண்டு முடிக்கிறேன்.

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலம் என்றொரு பகுதி உள்ளது. அதில் அகத்தியர் நிலைத்துத் தங்கிய இடமும் சுட்டப்படுகிறது. ‘அகத்தியன் வைகிய தாபகர் ‘தண்டகம்’ எனக் கம்பன் குறிக்கின்றார். அந்த அகத்திய முனிவர் பன்னக சாலைக்கு இராமன், சீதை, இலக்குவன் . ஆகிய மூவரும் சென்று சேர்கின்றனர். இராமன்


1. பெரியபுராணம்-சிறுத்தொண்டர் புராணம்.
2. கம்பர்17-அகத். 46
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/151&oldid=1127923" இலிருந்து மீள்விக்கப்பட்டது