பக்கம்:ஓங்குக உலகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

ஓங்குக உலகம்


வுழவின் பயனை நன்கு விளைப்பவராய் உள்ள நல்லவர்களைத் தலைவர்களாக-மன்னர்களாக-அரசர்களாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் அவர்களும் ‘குடிதழீஇக் கோலோச்சினார்கள்’ என்பதும் வள்ளுவர் வகுத்த அரசின் வழியே காணும் உண்மைகளாகும் என்பது தேற்றம். அத்தகைய மரபு பிற்காலத்திலும் இருந்ததென்பதைச் சோழர் காலத்திய குடவோலை முறை நமக்கு வற்புறுத்துகின்றது. மேலும் சங்ககாலத்திலேயே குடவோலை முறை இருந்தது என்ற உண்மையை அகநானூறு, சான்றுகாட்டி உவமை முகத்தான் விளக்குகின்றதன்றோ!

கயிறுபிணி குழீஇ
ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும்
ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர
நல்லமர்.கடந்த
தருக ணாளர்
குடர்தரீஇ தெறுவர
செஞ்செவி எருவை
அஞ்சுவர இகுக்கும்
கல்.அதர் கவலை’

(அகம் 77)

என்ற அகம் அக் காலக் குடஓலை முறையை நமக்கு உணர்த்தவில்லையா! எனவே வள்ளுவர் காலத்தில் ஆளும் மக்களைத் தேர்ந்தெடுப்பது குடவோலை முறை என்பதும் தெரிகின்றதன்றோ?

மன்னனுக்குத் துணையாகும் பெரியாரைப் பற்றியும் அவர் வழிமொழி நடக்காத வேந்து கெடுவதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/161&oldid=1135841" இலிருந்து மீள்விக்கப்பட்டது