பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
புதன்

புதன் கிழமை!

அன்றுதான் அந்த ஹோட்டலுக்கு விடுமுறை நாள்.

உமைபாலன் வழக்கம்போலவே சூரிய உதயத் துக்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்து விட்டான். படுக்கை என்றால் என்ன தெரியுமா? உடைந்த செங்கல்தான் தலையணை. கிழிசல் துணி தான் பாய். படுக்கையை ஒரு புறமாக மறைத்து விட்டுப் பல் துலக்கிவிட்டு வந்தான். மலரும் கதிரவனைக் கண்டதும் மலர்ந்தது அவன் உள்ளம். கைகூப்பி அஞ்சலி செய்துவிட்டு வந்தான். பசியின் உணர்வு எழுந்தது. அரைநிமிஷம் அவன் எதையோ நினைத்துக் கொண்டவனாக - எதற்கோ ஏங்குபவன் போலத் தோன்றினான். ஆனால் மறுவினாடியே, எதையும் நினைக்காதவன் போலவும் எதற்குமே ஏங்காதவன் மாதிரியும் மாறினான்.

'பிஞ்சு மனத்தில் விதைக்கப்படும் தன்னம்பிக்கை, பக்தி, அறிவு, அன்பு போன்ற குணநலன்கள் நாளடைவில் பண்பட்டு வந்தால், அவை ஒவ்வொன்றுமே பிற்காலத்தில் அவனுக்குப் பக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/19&oldid=1162583" இலிருந்து மீள்விக்கப்பட்டது