பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1


ஆவல் பிறந்தது

ஆசியா மைனர் நாட்டில் ஓர் ஆற்றங்கரையில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அந்த ஆற்றங்கரையில் அவர் வாழ்ந்த இடத்தின் பக்கத்தில் இருந்த துறை மிகவும் ஆழமானது. எளிதாகக் கடக்க இயலாத ஆபத்தான இடம் அது. அந்தப் பெரியவர் நல்ல உயரமும் வலுவும் பொருங்திய உடலைப் பெற்றிருந்தார். பிறருக்குழைப்பதே பேரின்பம் என்ற எண்ணமுடையவர் அவர். எனவே, அந்தத் துறை வழியாக ஆற்றைக் கடக்க முயலுவோருக்கு எப்போதும் அவர் உதவியாக இருந்தார். வலுவான உடலும் நலமான எண்ணமும் படைத்த அந்தப் பெரியவருக்கு, வாழ்விலே ஒரு குறிக்கோள் இருந்தது. இறைவனைக் கண்ணாரக் காணவேண்டும் என்பதுதான் அந்த இலட்சியம். அந்த இலட்சியம் நிறைவேறுவதற்கு வழி என்ன என்பது அவருக்குப் புரியவேயில்லை. அதற்காக என்ன செய்யவேண்டும் என்றும் அவருக்குத் தெரியவே யில்லை.

ஒருநாள் அவர் தம் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு குழந்தையின் குரல் அவர்