பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Install

757

Installation spec


Install : நிறுவு : புதிய நிரல் தொகுப்பு ஒன்றின் அம்சங்களை ஒரு குறிப்பிட்ட கணினி முறைக்கு, அதனைக் கையாள்வதற்காக பழக்கப் படுத்துதல். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நிரல் தொகுப்பினை அச்சிடு கருவியுடன் உரையாட, மரபு வழி நடைமுறைகளை நிறுவுதல்.

Instaliable device driver : நிறுவக் கூடிய சாதன இயக்கி : பிழை நீக்கம் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளைப் பயன்படுத்த இயக்க முறையுடன் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சாதன இயக்கி.

Installable File System Manager : நிறுவத்தக்க கோப்பு முறைமை மேலாளர் : விண்டோஸ் 95இல் கோப்புக் கட்டுமானத்தில் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. கோப்பு முறைமையின் பல்வேறு கூறுகளையும் விருப்பப்படி அணுகுவதற்கு இம்மேலாளரே வழியமைத்துக் கொடுக்கிறது.

Installation : நிறுவுதல் : ஒரு குறிப்பிட்ட கணினி முறைமைக்கு அது செய்கின்ற ஒட்டுமொத்தமான பணி, அதனை நிர்வகிக்கிற தனியாள்கள், அதனை இயக்குவோர், அதனைப் பயன்படுத்துவோர். அது தீர்வு காணும் சிக்கல்கள், அதனால் விளையும் பயன்கள் அடிப்படையிலான பொதுப் பெயர்.

installation programme : நிறுவு நிரல் : ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டி யிருக்கும். பயனாளர் பல்வேறு கட்டளைகளை நினைவில் வைத்துக் கொண்டு நிறுவும் பணியைத் தொடர வேண்டியிருக்கும். இத்தகைய சிக்க லான பணியை எளிமைப் படுத்தி பயனாளரைத் தோழமையுடன் வழிநடத்தி, மென்பொருள் தொகுப்பைக் கணினியில் நிறுவ உதவுவதே நிறுவு நிரலின் பணி. சட்டத்துக்குப் புறம்பாக அம்மென்பொருள் தொகுப்பை நகலெடுத்துப் பயன்படுத்த முடியாதவாறு நகல் பாதுகாப்பு (Copy Protection) பணியையும் இந்த நிரல் செய்வதுண்டு.

Installation spec : நிறுவு வரையறை : வெளிப்புறச் சூழ்நிலையில் ஒரு பொருளை எவ்