பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phrase search

344

.pict


வாக்குகின்ற செயலாக்கம். கணினி வரைகலையில் எதார்த்த ஒளிப் படத்திற்குத் திறன்மிக்க கணினிகள் தேவை. சிக்கலான கணிதத்தின் அடிப்படையிலான நுட்பம்மிக்க மென்பொருளும் தேவை.

phrase search : சொல்தொடர் தேடல்.

phreak1: அத்துமீறி : ஒரு தொலைபேசிப் பிணையம் அல்லது பிற பாதுகாக்கப்பட்ட கணினி அமைப்புகளின் அரண்களை உடைத்து நொறுக்குபவர் அல்லது அத்துமீறி உள்ளே நுழைபவர்.

phreak2 : அத்துமீறல் : தொலைபேசிப் பிணையம் அல்லது கணினி அமைப்புகள்-இவற்றின் அரண்களை உடைத்து நொறுக்கி அத்துமீறல்.

physical-image file: பருநிலை படிமக் கோப்பு : குறுவட்டில் (சிடி-ரோம்) பதிவதற்காக வைத்துள்ள தகவலை நிலைவட்டில் சேமித்து வைத்துள்ள கோப்பு. இவ்வாறு ஒரு கோப்பில் சேமித்து வைப்பது சில சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது. குறிப்பாக குறுவட்டில் எழுதும் நேரம் மிச்சமாகிறது. சிதறிக் கிடக்கும் கோப்புகளை தேடிப் பிடித்து தொகுத்து எழுதுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் அதிக நேரம் தவிர்க்கப்படுகிறது.

physical layer : பருநிலை அடுக்கு : ஏழு அடுக்குகள் கொண்ட ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ அடுக்கின் முதல் அல்லது மிக அடியிலுள்ள அடுக்கு. முற்றிலும் வன்பொருளைச் சார்ந்தது. தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள இரு கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளின் அனைத்து கூறுகளையும் கவனித்துக் கொள்கிறது. வட (cable) இணைப்பு,மின்சார சமிக்கைகள் மற்றும் எந்திர இணைப்புகள் ஆகியவை இவ்வடுக்கின் வரன்முறைகளுள் சில.

physical memory : பருநிலை நினைவகம் : ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள மெய்யான நினைவகம். இது மெய்நிகர் நினைவகத்துக்கு (Virtual Memory) மாறானது. 4எம்பி மட்டுமே பருநிலை ரேம் (RAM) நினைவகம் பொருத்தப்பட்டுள்ள ஒரு கணினியில் 200எம்பி வரை மெய்நிகர் நினைவகம் வைத்துக்கொள்ள முடியும்.

picoJava : பிக்கோ ஜாவா : ஜாவா மொழி நிரல்களை நிறைவேற்றுகிற நுண்செயலி. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியது.

PICS : பிக்ஸ்: இணைய உள்ளடக்கத் தேர்வுக்கான பணித்தளம் எனப் பொருள்படும் Platform for Internet Content Selection என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பயனாளர் ஒருவர் இணையத்திலுள்ள தமக்குப் பிடித்த தகவலடங்கிய குறிப்பிட்ட தளங்களைத் தாமாகவே தேடி அணுகுமாறு செய்ய முடியும். அதேவேளையில் விரும்பத்தகாத தகவலடங்கிய தளங்களைப் புறக்கணிக்குமாறும் செய்ய முடியும். இவ்வாறு தளங்களைத் தேர்வுசெய்ய வெவ்வேறான தர மதிப்பீட்டு முறைகள் பயன்பாட்டில் உள்ளன.

.pict : பிக்ட் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் பிக்ட் (PICT) வடிவாக்க முறையில் பதிவு செய்யப்படும் வரைகலைப் படிமக் கோப்புகளை அடையாளங் காட்டும் கோப்பு வகைப்பெயர்.