பக்கம்:கனிச்சாறு 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  101

உள்ளத் திறைவனை ஒப்பாது, பார்ப்பான்
கள்ளத்துத் தோற்றிய கயவருக் கெல்லாம்
படிவம் சமைத்து, விழாப்பல வெடுப்பாய்!
விடிவிலா இருளுள் விழுந்து கிடப்பாய்!
இனமும் மொழியும் வழியும் கெட்டு
மனமும் கெட்டு மழுங்கினாய் தமிழா!

இனியா கிலும்விழி; இழிவை அகற்று!
பனியும் மழையும் வெயிலும் பாராது
கடமையைச் செய்நீ! மடமையை உதறு!
உடைமையை நீபெறும் நாளுமொன் றுண்டே!

-1969



60  விடுதலை பிறக்கும்!

வடவர்க்கும் பார்ப்பனர்க்கும் வால்பிடித்தே
வாழுகின்ற நிலையைப் பெற்றே
படநிற்கும் நெடுமரம்போல் பாயிழந்த
மரக்கலம்போல் பற்றி ழந்தே
கெடநிற்கும் தமிழா,உன் கீழ்மையினை
ன்றுணர்ந்து கிளர்.வா யானால்
தொடநிற்கும் பெருந்துயரும் தூளாகும்
விடுதலையும் தோன்றும் அன்றே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/137&oldid=1424758" இலிருந்து மீள்விக்கப்பட்டது