பக்கம்:கனிச்சாறு 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  133

78  தமிழர்க்கு விடிவுண்டு !

பார்ப்பனர் நால்வர் சேர்ந்தால்
பகை,பூசல், பொறாமை மற்றும்
ஆர்ப்பரிப் பெதுவு மின்றி,
அவரின வேர்க்குள் நீரை
வார்ப்பதெப்படி? என் னென்ன
வழிவகை? தமிழி னத்தைத்
தூர்ப்பதெப் படி? - என் றெல்லாம்
எண்ணுவார்; துணையும் காண்பார்!

அந்தோ! இவ்வுலகில் உள்ள
அனைவர்க்கும் மூத்த தாம் நம்
செந்தமிழ் இனத்தில் நால்வர்
சேர்ந்திடில், தமக்குள் தாமே
கொந்துதல், குடைதல், குத்தல்,
குழிபறித் திடுதல் - எல்லாம்
சந்தையில் நடப்ப தைப்போல்
சடுதியில் நடந்து போகும்!

ஒருவனை ஒருவன் ஏய்ப்பான்;
ஒருவனை ஒருவன் சாய்ப்பான்;
உருவாகித் திரளும் போழ்தில்
ஒருவனை ஒருவன் மாய்ப்பான்!
குருவினை முதுகில் குத்தி
மாணவன் குடைந்து பார்ப்பான்!
எருவெனப் பயனா கின்ற
ஒருவனை இணைந்தெ திர்ப்பான்!

தமிழின இளைஞர் கூட்டம் -
(தப்பில்லை நானு ரைத்தல்)
உமியினம்! பயனே யின்றி
ஊர்சுற்றும்; தெருக்கள் சுற்றும்!
திமிலெனத் தோற்றம்! ஆனால்
தென்பில்லை; ஊற்ற மில்லை!
இமியள வேனும் நம்மின்
இனம்பற்றிக் கவலை யில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/169&oldid=1416762" இலிருந்து மீள்விக்கப்பட்டது