பக்கம்:கனிச்சாறு 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


மரத்தினில் செய்த பாவை
மாந்தரை எழுப்பிப் போக்கு
வரத்தினில் வீர ராக்கும்
மந்திரப் பாடஞ் செய்யும்
உரத்தினில் உழன்று கொண்டா
உயிர்க்கின்றாய், தமிழ நெஞ்சே!

துலங்கட்டும் தமிழும் வாழ்வும்
துய்க்கட்டும் உரிமை என்றே,
குலங்கெட்டு நினைவும் கெட்டுக்
குழிக்குப்போய் மண்ணும் தின்ற
புலங்கெட்ட தமிழ்க்கூட் டத்தைப்
புதுக்கவா இதுநாள் மட்டும்
நலங்கெட்டு வாழ்வும் கெட்டு
நலிகின்றாய், தமிழ நெஞ்சே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/234&oldid=1437434" இலிருந்து மீள்விக்கப்பட்டது