பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

15


என்னா இருந்தாலும் இந்த மாதிரி அநியாயம் கூடாது” என்று பிறிதொருவனும் கூறி, எல்லோருமாக, “நீ போகாதேடா அந்தக் கலியாணத்துக்கு” என்று சொன்னார்கள். “நான் போறது அந்தக் காலியாணத்துக்காக மாத்திரமில்லை. வேறு சொந்த வேலை கொஞ்சம் இருக்கிறது” என்று பரந்தாமன் சொன்னான்.

தூக்கம் தெளியாத நேரம்! முகூர்த்தம் அந்த வேளையில்தான் வைக்கப்பட்டிருந்தது! கோழி கூவிற்று. கூடவே வாத்தியம் முழங்கிற்று! சாரதா கண்களிலே வந்த நீரை அடக்கிக் கொண்டு “கலியாண சேடிகளிடம் தலையைக் கொடுத்தாள்! அவர்கள் தைலம் பூசினார்கள்! சீவி முடித்தார்கள்! ரோஜாவும் மல்லியும் சூட்டினார்கள்! புத்தாடை தந்தார்கள்! பொன் ஆபரணம் பூட்டினார்கள்! முகத்தை அலம்பச் செய்தார்கள். பொட்டு இட்டார்கள்! புறப்படு என்றார்கள்! மாரியப்பபிள்ளைக்கு மாப்பிள்ளை வேடத்தைக் காரியஸ்தர் கருப்பையா செய்து முடித்தார்! மேளம் கொட்டினார்கள், மணப்பந்தலுக்கு சாரதா வந்தாள். பரந்தாமன் அங்கொரு பக்கம் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள் அவள் கால்கள் பின்னிக்கொண்டன. கண் மங்கிவிட்டது. எல்லோரும் என்ன? என்ன? என்று கேட்டுக்கொண்டு ஓடினார்கள் சாரதா அருகில். பரந்தாமன் உட்கார்ந்தவன் உட்கார்ந்தவன்தான் அவனால் அசையக்கூட முடியவில்லை. அவ்வளவு திகைப்பு! என் சாரதா மணப்பெண்! என் காதலியா, இந்தக் கிழவனுக்கு! பாட்டியாகிறாளே என் பாவை! இந்தக் கோலத்தையா நான் காணவேண்டும் என்று எண்ணினான். அவனால் ஏதும் செய்ய முடியாது தவித்தான். யாரிடம் பேசுவான்! என்ன பேசுவது; யார் இவன் பேச்சைக் கேட்பார்கள்! எப்படி இவனால் தடுக்க முடியும்; மெல்ல எழுந்து சாரதா