பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

ஒழுக்கைக் கொண்ட; நறுமலர் யாழின் – மணம் கமழும் மலராகிய யாழிலே; சுரும்பு—வண்டுகள்; பாண் செய—இசை பாடவும்; தோகை நின்று ஆடுவ—மயில்கள் தோகையை விரித்து நின்று ஆடுவன.

𝑥𝑥𝑥𝑥


ட்ட வாள் நுதல் மடந்தையர்
        பார்ப் பெனும் துதால்
எட்ட ஆதரித்து உழல்பவர்
        இதயங்கள் வெறுப்ப
வட்ட நாள் மரை மலரின் மேல்
        வயலிடை மள்ளர்
கட்ட காவி அம்கண் கிடை
        காட்டுவ கழனி.

நெற்றிப் பட்டம் அணிந்த பெண்கள் மிக அழகாக விளங்குகிறார்கள். அவர்களது பார்வையிலே மயங்கிவிட்ட ஆண்கள் அவர்களை எட்டிப் பிடிக்க விரும்பத் திரிகிறார்கள். அந்தப் பெண்களோ அவர்களது கைக்கு எட்டாமல் ஓடி விடுகிறார்கள்.

அந்த சமயத்திலே வயல்களிலே களை பிடுங்கும் உழவர்கள் நில மலர்களைப் பிடுங்கி எறிகிறார்கள். அருகில் உள்ள நீர்நிலையிலே தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. உழவர் வீசிய நீல மலர்கள் அந்தத் தாமரை மலர் நடுவே விழுந்து கிடக்கின்றன.

அது எப்படியிருக்கிறது ? நீரிலே இறங்கிக் கழுத்து வரை மறைத்துக் கொண்டு அந்தப் பெண்கள்தான் தங்கள் முகம் காட்டுகிறார்களோ என்று கருதுமாறு இருக்கிறதாம்.