பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

விபீடணனுக்கு இலங்கையைக் கொடுத்தான் என்னும் செய்தியை, - - -

“தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே

தந்தேன் என்றான்” (6631) என்னும் கம்பராமாயணப் பாடல் பகுதியால் அறியலாம். இத்தகைய மரபை ஒட்டியே விடுதலை கிடைப்பதற்கு முன்பே வென்று பெற்றுவிட்டதாகப் பாரதியார் ஆடியுள்ளார்-பள்ளு பாடியுள்ளார்.

4-6. உலக நாடுகளின் வரலாறு:

மாஃசினியின் சபதம், பெல்சியத்திற்கு வாழ்த்து, புதிய ருழ்சியா, கரும்புத் தோட்டத்திலே-என்னும் தலைப்புகளில் உலக நாடுகள் சிலவற்றின் நிலைமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

4-6-1. மாஃசினியின் சபதம்:

மாஃசினி (Mazzini, Giuseppe கி. பி. 1805-72) என்பவர் இத்தாலி நாட்டு அரசுத் தலைவர்களுள் ஒருவர்; பண்டிட் சவகர்லால் நேருவுக்கு விடுதலை உணர்ச்சி தோன்றக் காரணமாயிருந்தவர்களுள் ஒருவரான கரிபால்டி என்பவைரத் தம் படையாட்சியாகக் கொண்டு செயல்பட்டவர்; சிதைந்து கிடந்த இத்தாலி நாட்டை ஒன்றுபடுத்தவும் அதைக் குடியரசாக்கவும் அரும்பாடு பட்டவர். அதற்காக இவர் எடுத்துக் கொண்ட ஆணையை-சபதத்தைப் பற்றிப்பாரதியார் இந்தத் தலைப்பில் பாடியுள்ளார்.

4-6-2-பெல்சியத்திற்கு வாழ்த்து:

பெல்சியம் மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இது காலந்தொறும் பலருக்கு அடிமைப்பட்டுப் பின்பு விடு-