உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

னின் ஆட்சிக்காலம் கி.பி. 825 முதல் 850 வரையாகும் என்று ஒரு சாராரும் , 339 முதல் 360 வரை என்று மற்றொரு சாராரும், 847 முதல் 872 வரை என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். எது எப்படியிருந்த போதிலும் நந்தி வர்மன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்பது வரைக்கும் முற்ற முடிந்த உண்மையாகும்.

மூன்றாம் நந்திவர்மன்:

மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவ குலப் பேரரசர்கள் காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியை ஆண்டு வந்தனர். பல்லவப் பேரரசின் இறுதிநூற்றாண்டாகிய ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த நந்திக் கலம்பக நாயகனாகிய மூன்றாம் நந்திவர்மன் தந்தி வர்மப் பல்லவனின் மகனாவான். இவன் மகன் நிருபதுங்கன்; பேரன் அபராசிதன். அபராசிதனோடு பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.

நூல் தோன்றிய வரலாறு:

நந்திக் கலம்பகம் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது. அதே நேரத்தில், அந்த வரலாறு நம்பத்தக்கதா என்ற ஐயப்பாட்டிற்கும் உரியதாயுள்ளது. அவ்வரலாறு நம்பத்தக்கதுதான் எனின் அது தமிழுக்குப் பெரிய வெற்றியேயாகும். தமிழுக்கு வெற்றி. -தமிழுக்குப் பெருமை என்பதற்காக, நம்பக்கூடாத நம்பமுடியாத ஒரு வரலாற்றை நம்பித்தான் தீரவேண்டும் என்பதில்லை. சரி,அந்த வரலாறு என்னவென்று தான்பார்த்து விடுவோமே! இதோ அவ்வரலாறு :

நந்தி வர்மனின் தம்பியர் அவனோடு பகை கொண்டிருந்தனர். நந்தியைக் கவிழ்த்துத் தாங்கள் நாடாள வேண்டு-