பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

களுள் சிலருடைய நூல்களைச் சிலர் விரும்பிப் படிப்பதுண்டு . திரு.க.வின் நூல்களை மிகவும் விரும்பிப் படித்தவர்களுள் ஒருவரைச் சிறப்பாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். புதுச்சேரிப் பெத்தி செமினர் உயர்நிலைப் பள்ளியில் பல்லாண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றிய சுவாமிக்கண்ணு என்னும் அடிகளார். திரு.வி.க. வின் நூல்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். இருவரும் மதத்தாலும்வேறுசிலவற்றாலும்வேறுபட்டவர்கள்.இருப்பினும், சுவாமிக் கண்ணு அடிகளார், திரு.வி.க.வின் நூல்களைத் தேடிக்கொண்டுவந்து தரும்படிஎன்னைக் கேட்டு வாங்கிச் சுவைத்துப் படிப்பார்; அவரது நடையழகின் இனிமையை அடிக்கடி என்னிடம் எடுத்துச் சொல்லுவார்; சில பகுதிகளைப் படித்தும் காட்டுவார். பின்னர், திரு.வி.க.வின் நூல்கள் சிலவற்றை விலைக்கு வாங்கிக் கொண்டு படித்து இனிமை கண்டார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திரு.வி.க.வின் உரைநடை அழகுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தரவேண்டும் அல்லவா? ஒவ்வொரு நூல் வாரியாகத் தருவது என்பது இயலாத செயல்-இடம் போதாது. எனவே, பொதுவாக அவர் நூல்களிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

திரு.வி.க.வின் வாழ்நாளிலே, திருப்பாதிரிப் புலியூரில் “ஞானியார் சுவாமிகள் என்பவர், திருக்கோவலூர்-திருப் பாதிரிப் புலியூர் ஆதீனத்து ஐந்தாம் பட்டத்து அடிகளாராய் வீற்றிருந்தார். அவர் பெரிய கல்விக்கடல். வேறு எவர் காலிலும் விழாத திரு.வி.க. உட்படப் பலர் அவர் காலில் விழுந்து வணங்குவர். அப்பெரியாரைப் புகழ்ந்து திரு.வி.க. எழுதியுள்ள உரைநடை அழகுக்குச் சான்றாக ஒரு சிறு பகுதி வருமாறு: -