பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

அச்சுப் பதிப்புப் பகுதி

7. ஈழம் ஈந்த தாமோதரனார்


‘பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கவேண்டும்’ என்னும் ஒரு தொடரை நாம் அடிக்கடிப் பலர் வாயிலாகக் கேட்டு வருகின்றோம். பெற்ற பிள்ளையினையும் நன்கு பேணிக் காக்கவேண்டும். இந்தக் கருத்து இலக்கியத் துறைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

உலகத்தின் மூத்த மொழிகளுள் ஒன்றாகிய தமிழ் மொழியில் இப்போது பல நூல்கள் இருப்பதை நாம் அறிவோம். இதற்குமுன் இருந்து அழிந்துபோன மிகப் பலவான நூல்களை நோக்க, இப்போது இருக்கும் பல நூல்கள் எனப்படுபவை, சில நூல்கள் என்று சொல்லத்தக்க அளவில் சிறுபான்மையினவேயாகும். தமிழ் நூல்களுள் சென்றன போக நின்றன சிலவே. சென்றனவே பல. இந்த இமாலயப் பேருண்மையை, தமிழ்நாட்டு வரலாறும் தமிழ்மொழி-இலக்கிய வரலாறும் அறிந்தவர்கள் நன்கு உணர்வர்-ஒத்துக்கொள்வர்.

பிறந்த இலக்கியம், இலக்கணம், இன்னும் மற்ற மற்ற கலை நூல்களையெல்லாம் பேணிக் காக்காமையினாலன்றோ பெரும்பாலன அழிந்து போயின. இந்நிலையில், பிறந்த இலக்கிய இலக்கண நூல்களுள் சிலவற்றையாயினும் பேணிக் காத்து நமக்குக் கிடைக்குமாறு செய்த பெருமக்களைப் பற்றி எவ்வளவு போற்றிப் புகழினும் தகுமே! இலக்கிய இலக்கணக் கலைநூல்களையெல்லாம் இயற்றிய பேரறிஞர்களைப் போலவே, அவற்றை இறவாமல் பேணிக் கரத்து நம் கையில் கிடைக்கச் செய்த பெருமக்கள் மிகவும்