பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 120 I- Te៨េ இளவரசனுக்கு ெ முதலில் உரைநடைக்கும் கவிதைக் கும் உள் ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாகக் கருதி மயங்காதே. அழகான-பளபளப்பான து ன் களையும் உறுப்புகள் அமைந்த சிலைகளையும் பார்த்துவிட்டு இரண்டும் கற்களால் அமைந்தவை.தாமே என்று கருதி அவற்றை ஒன்று என்று அஃதாவது சிலையென்று முடிவு கட்டிவிடாதே. சிலை வேறு; தூண் வேறு. உரைநடையும் கவிதையும் சொற்களால் அமைந்தவை தாமே என நினைத்து அவை இரண்டும் ஒன்று எனக் கருதிவிடாதே. இரண்டும் வெவ்வேறு தன்மையன. ‘‘கூட்டுக் க்வியினிலே கவிதை கொண்டு தர வேண்டும்- அந்தப் பாட்டுத் திறத்தாலே-வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்று பராசக்தியிடம் பாரதியார் வேண்டுவதாக ஒரு பாடல் உண்டு. அப் பாடலில் 'கவிதை கொண்டுதர வேண்டும்” என்று வேண்டுகிறார். அஃதாவது கவிதை தானாக உள்ளுணர்ச்சியிலிருந்து புறப்பட்டு வெளிவர வேண்டும் என்பது கருத்து. ஆனால் உன்னிடமிருந்து கவிதை தானாக வெளிவரவில்லையே. வலிந்து இழுத்து வந்தது போலக் காணப்படுகிறது. அவ்வாறிழுப்பது கவிதை யாகாது. உணர்ச்சி உள்ளிருந்து உந்தத் தானே பொங்கி வெளிவர வேண்டும் கவிதை. அது தான் உயிர்க்கவிதையாக இருக்க முடியும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் கவிதை எப்படியிருக்க வேண்டும் என விளக்கம் தருகின்றார்.