உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=- - அன்புள்ள இளவரசனுக்கு Li si H எது குறையினும் கவிதையாகாது. வீடு அல்லது இல் என்ற பொதுப்பெயர் அமைப்பு முறைகளால் குடில், வளமனை, அரண்மனை, கோவில் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் பெறுகின்றன. அது போலவே கவிதை அல்லது பாட்டு என்ற பொதுப் பெயர் அமைப்பு முறைகளால் வெண்பா அகவற் பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய சிறப்புப் பெயர்கள் பெறுகின்றன. --- இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டு அதற்கு அடிமையாகி எழுதப்படுவது உயிர்க் கவிதையாகி விடாது. இலக்கணத்தைத் தனக்குக் கட்டுப்படுத்தி அதனை அடிமையாக்கி எழுதப் படுவது தான் உயிர்க்க விதை யென்றும் உணர்ச் சிக் கவிதை யென்றும் சொல்லப்படும். அஃதாவது கவிஞன் இலக்கணத்திற்குப் பின் னே செல்லுதல் கூடாது. இலக்கணம் கவிஞனுக்குப் பின்னே வருதல் வேண்டும். இலக்கணம் அவன் புலமை யொ டு இரண்டறக் கலந்து விடின் உணர்ச்சி உந்த அவனிடமிருந்து வெளிப்படும். பாடல்களிலே இலக்கணம் தானாக அமைந்துஆ كما قصتنا இவ்வாறு வெளிவரும் உயிர்க்கவிதைகன் இன்று சில நேரங்க ளில் மட்டும் , இதன் படுகின்றன. ஏனைய m H. . - **A*ア% - o நேரங்களில் உயிரற்ந்fேicற வரிகள் தாம் முடிசூடி வெளிவருகின்றன. இவ்வாறு சீர் கெட்டுப் போய்க் கிடக்கும் கவிதையுலகில் நீ கவிஞனாக உலா வர எண்ணுகிறாய். தமிழ் மொழிக்குத் தீங்கு செய்துவிடாதே. விழிப்பாக இரு அடிப்படையின்றி அம் முயற்சியில் ஈடுபடாதே. அடிப்படை இலக்கணத்தில் நன்கு பயிற்சி பெறு. இலக்கியங்களை ஊன்றிப்படி. பாரதியார், பாரதிதாசன் பாடல்களைத் திரும்பத் திரும்பப்படி. அடிக்கடி எழுதி