உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- = -C - - (விரசர் முடியரசன் C 131. ஒரு கவிதை எந்த மொழியில் எழுதப்பட்டதோ அந்த மொழியின் வாயிலாகவே படிப்பதுதான் சிறந்தது. அப்பொழுது நான் கவிஞனுடைய உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உணர்ந்து சுவைக்க முடியும். அதைவிடுத்து மொழி பெயர்த்து அதனைப்படித்தாற் பயனில்லை என்றும் தாகூர் கூறுகிறார். “தாய்மொழி வாயிலாகவே கவியின் உள்ளத்தைக் காண முடியயும், மற்ற மொழியின் வாயிலாகக் கவியின் உள்ளத்தைக் காண முயல்வது, வக்கீலுக்கு வக்காலத்துக் கொடுத்துக் காதலியின் அன்பைப் பெற முயல்வது போன்றது” என்று எள்ளி நகைக்கிறார் தாகூர். கவிஞனுக்குக் கவிதையின் பால் ஒருவிதக் காதல் வெறியிருக்க வேண்டும். அதனுடன் ஒன்றி விட வேண்டும். அப்பொழுதுதான் உணர்ச்சிக் கவிதைகள் தோன்றும். இவ்வுண்மையை உணர்ந்த பாரதியார், கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, “ கவிதையாம் மணிப் பெயர்க் காதலி' எனவும், “மனைவியாம் கவிதைத் தலைவி யெனவும் பாடுகிறார். மற்றோரிடத்து இன்னும் அழகாகக் கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். “முன்னிக் கவிதை வெறி மூண்டே நன வழியப் பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சி” என்று கவிதை வெறி மூள வேண்டும்; அதனால் ாவழிய வேண்டும்; அஃதாவது தன்னை மறந்த நிலை பரவேண்டும். அப்பொழுது தான் விழிப்பிலே தோன்றும் காவு போலக் கவிதை வெளிப்படும் என்கிறார்.