பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -T - (கவியரசர் முடியரசன் 13s) மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள். மா என்னம் |றெழுத்தொருமொழிக்குப் பல பொருள்கள் உண்டு. பெருமை, கருமை, விலங்கு, மாமரம், மாமைநிறம், அரிசி முதலியவற்றின் மாவு எனப் பல பொருள்கள் உண்டு. மா கடல், என்றால் பெருங்கடல் என்று பொருள். மாக்கடல் ான்றால் கருங்கடல் என்று பொருள். இங்கே மா தமிழ் ான்ற விடத்து மா என்பது தமிழின் பெருமை குறிக்க வந்தது. செந்தமிழ் என்றும் பைந்தமிழ் என்று 3 கூறுவரேயன்றிக் கருந்தமிழ் என்று கூறுவாரிலரே. இதற்குப் பாரதத்திலிருந்து எடுத்துக்காட்டு ஒன்று தருகிறேன். தூது வந்த கண்ணன், துரியன் அரண் மனைக்குச் செல்லாமல், விதுரன் இல்லத்திற்குச் செல்கிறான் அவனைக் கண்ட விதுரன் பெருமகிழ்வு கொண்டு "என்ன மாதவம் செய்தது இச் சிறுகுடில்” என்று கூறுகிறான். இங்கே மா தவம் என்று கூறுகின்றானே தவிர மாத்தவம் என்று கூறவில்லை மா என்னும் சொல் பெருமை குறிப்பதாக இருந்தால் மாதவம் என ஒற்று மிகா மற்றான் வரும். அதுபோல மாதமிழும் ஒற்று மிகாமல் வர வேண்டும். அடுத்து, “கூறுமாப்போலே" என்னும் இடத்திலும் கூறுமா போலே என ஒற்று மிகாமல் எழுதுதல் வேண்டும். கூறுமாறு போலே என்பதுதான் கூறுமாபோலே எனத்தொக்கு வந்தது. நூல்களா ? நூற்களா ? இனி உன் மடலில் நூற்கள் எனக்குறிப்பிட்டிருந்தாய். நூல்கள்=நூல்கள் என வரவேண்டுமே தவிர நூற்கள் என வருதல் தவறாகும். வேல்கள், கால்கள், எனக் குறிப்பிடுவரே தவிர வேற்கள், காற்கள் என எவரும் குறிப்பிடுவதில்லை.