பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் ಆರಕT - 145) இல்லை. அதனால், உன்னால் இயன்ற அளவு அறத்தினைச் செய்ய விரும்பு; இடைவிடாது செய்ய விரும்பு, செல்லும் வாயெல்லாம் செய்ய விரும்பு. அறஞ் செய்தல், பொருளுடையவர்க்கே இயலுவதாகும் ான்று நீ கருத வேண்டாம். நீ அவ்வாறு கருதுவதில் ஒரளவு பண்மையும் உளது. எனினும் தமிழர் கண்ட அறம், எல்லாராலும் ாளிதிற் பின்பற்றத் தக்கதாகும். அதனைச் செய்ய விரும்பு ான்றுதான் உனக்கு எழுதுகின்றேன். நல்லன எண்ணுதல், நல்லன சொல்லுதல், நல்லன செய்தல் இவையே அறம். அஃதாவது மனம், சொல், செயல் மூன்றுந் தூய்மை யுடையனவாக இருத்தல் வேண்டும் என்பதே தமிழ் அறம். நல்லன சொல்லும் பொழுதும் நல்லன செய்யும் பொழுதும் மனம் எவ்வகைய மாசும் இன்றித் தூய்மையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவை சிறக்கும். மனத்துள் மாசுடையவராய் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அஃது, ஆரவாரத்திற்காக ஆடம்பரத்திற்காகச் சொல்வதாகவும் செய்வதாகவுமே அமையும். மனத்துக்கண் மாசில னாக இருப்பதொன்றே அறமெனப்படும் என வள்ளுவம் வழி வகுத்திருப்பதை, நன்கு மனத்திற் பதிய வைத்துக்கொள். மாசுகள் எனப்படுபவை யாவை ? மனத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ளுவது என்று நீ எண்ணலாம். அவற்றையுத் தெளிவாக எழுதுகிறேன். பிறர் நலங் கண்டு) பொறாமைப்படுதல், அளவு கடந்து பேராசைப்படுதல், இவை காரணமாகப் பிறரிடஞ் சினங்கொள்ளுதல், இச்சினங் காரணமாகக் கடுஞ்சொற் பேசுதல் என்பனவே மாசுகள்