பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... உனக்கு நினைவுறுத்தக் கருதுகின்றேன். இத்தகு நட்பின் சிறப்புகள் யாவை ? உண்மை நட்பின் தன்மை யாது ? எத்தகைய நட்பு வேண் டற் பாலது ? எத்தகைய நட்பு விலக் கற்பா லது ? என்பன பற்றி எழுதினால், நீ இணக்கம் அறிந்தினங்க ஏதுவாக இருக்கும். ஒரு நல்ல நூலைக் கற்கும்பொழுது இன்பம் விளைகிறது. மறு முறை அதனை க் கற்கும் பொழுது மேலும் இன்பம் விளைகிறது. மீண்டும் பயில் கின்றோம்; புதிய இன்பம் உண்டாகிறது. பயிலுந்தோறும் பயி லு ந் தோறும் நூல், புதுப் புது இன் பத்தைத் தந்து கொண்டே யிருக்கிறது. அதைப் போலவே நற்பண்புகளைக் கொண்டே நல்லோருடைய நட்பு, பழகப் பழக இன் பஞ் செய்து கொண்டே இருக்கும். ஒருவனுக்கு ஆடை குலைந்த பொழுது, அவனுடைய கை தன்னியல்பிலே சென்றுதவி, அவ் விளிவரலை நீக்கிக் காக் கின்றது. அது போலவே ஒருவன் துன்புற்றகாலை, அவன் வேண்டா முன்னரே தன்னியல் பால் விரைந்து சென்றுதவி ச்ெய்து, அத்துன் பத்தை நீக்கிக் காத்தல் செய்கிறது நட்பு. மேலும் தன் மனைவி, மக்கள், உறவினர் என்னும் இவரிடத்துச் சொல்ல முடியாத செயல்களை, மனநிலையை, தன் மனத்துள் உறுத்திக் கொண்டேயிருக்கும் சில எண்ணங்களை வெளிப்படுத்திக் காட்டி, வேண்டிய வழி வகைகளைத் தெரிந்து கொள்வதற்கு உற்ற துணையாக இருப்பது நட்பு. ஒருவன் அறிந்தோ அறியாமலோ தவறு செய்த வ்ழி, அவனை இடித்துரைத்து, நல்வழியில் நடக்குமாறு செய்யவல்ல வழிகாட்டி நட்பு. இவ்வாறு பல சிறப்புகளை யுடையது நட்பு.