உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டு மன்னன். பிசிராந்தையார் பாண்டியநாட்டுப் புலவர். இருவர்க்கும் இடையே இருந்த இடைவெளி மிகப் பெரியது; ஒருவரை யொருவர் கண்டு பழகாதவர்கள். ஒருவன் மன்னன்; மற்றவர் புலவர். செல்வத்தால் ஏற்பட்ட இடைவெளியும் மிக மிகப் பெரிது. ஆயினும் உயிரையும் கொடுக்க வல்ல ஒப்பற்ற நண்பராக விளங்கினர். அந் நட்புக்கு, ஒத்த வுணர்ச்சியே காரணமாக இருந்தது. ஒருவரிடம் நட்புக் கொள்ளுமுன் அவருடைய இயல்பு களை நன்கு ஆராய்ந்து, அதன் பின்னரே கொள்ளுவதுந் தள்ளுவதுஞ் செய்தல் வேண்டும். முதலில் நன்கு ஆராய்ந்து பாராது நட்புக் கொள்ளுவது போலக் கேடு பயப்பது வேறொன்றில்லை. நட்புச் செய்த பின், அதனை விட்டு விடுவதென்பது எளிதன்று; ஆதலின் முன்பே ஆய்ந்து கொள் க, நற்கு டிப் பிறப்பும், பழிக் கஞ் சும் பண்பும், மாசற்ற மனமும் உடையவர் பால் நட்பாடல் வேண்டும். இவர் தம் நட்பை எத்தகைய விலை கொடுத்தாயினுங் கொள்ளுதல் வேண்டும். தோற்றத்தையும் வெளி வேடத்தை யுங் கொண்டு நம்பி விடுதல் கூடாது. உள்ளத்தைக் கொண்டே ஒர்ந்துணர்தல் வேண்டும். யானை, தோற்றத்தாற் பெரிது; நாய், உருவிற் சிறிது. எனினும் யானை யனையவர் நட்பு விலக்கற்பாலது. நாயனையவர் நட்பே வேண்டற்பாலது. யானை, பழகிய பாகனையே கொன்று விடுகிறது. நாய், தன்னை வள த்தவன் அடித்தாலும் துரத்தினாலும் அவனை விட்டகலாது. சுற்றிச் சுற்றி வருகிறது. ஆதலின் நன்றியுள்ளங் கொண்டவரிடத்தே தான் நட்பாடல் வேண்டும்.