பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168-அன்புள்ளான்னக்கு) சிறிதேனும் வேண்டும். இவ்வாறு வாழும் வாழ் விற் பெறுமின்பந் தனித்த சிறப்புடையது. நீயும் அவ்வுள்ளத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தில் சில கருத்துகளை இக்கடிதத்தில் எழுதுகின்றேன். பழங்கால மனிதன் காடுகளிலும், மரக்கிளைகளிலும், மலைக் குகைகளிலும் தனித்து வாழ்ந்தான். அப்பொழுது தனக்கென்று வாழுந் தன்மையுடையவனாக வாழ்ந்தான். பிறகு காலஞ் செல்லச் செல்ல, அறிவு வளர வளரக் கூடிய வாழக் கற்றுக்கொண்டான். கூடி வாழக் கற்றுக் கொண்ட மனிதன், தனக்கென்று வாழாது, பிறர்க்கும் உரியவனாக வாழத் தலைப்பட்டான். தனியே வாழ்ந்த அவன், காலப் போக்கில் சமுதாய வாழ்வை உருவாக்கிக் கொண்டான். அச்சமுதாய வாழ்வில் ஒருவருக்கொருவர் உதவி செய்து, கலந்து, நெருங்கிப் பழகலாயினர். அன்று முதல் ஒவ்வொரு மனிதனும் மற்றவனுடைய உதவியின்றி வாழ முடியாத சூழ்நிலையைப் பெற்றான். ஆதலால் ஒவ்வொருவனும் பிறருக்குத் தன்னால் இயன்ற உதவி செய்து வாழவேண்டும் என்ற உளப்பாங்குடையவனாகத் திகழ்ந்தான். இவ்வாறு ஒருவர்க்கொருவர் உதவும் பண்பைத்தான் ஒப்புரவு என்று கூறினர். ஒப்புரவு என்னுஞ் சொல்லின் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால், அச்சொல்லின் அருமை பெருமைகள் நன்கு புலனாகும். நம் முன்னோர், எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து, அச்சொல்லைப் படைத்துள்ளனர் என்பதையும் அறியலாம்.