பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TETT கவியரசர் முடியரசன் மொழிக்கே ஆட்பட்ட ஒருவர் எத்தகைய பெரியவராயினும், மொழியைப்பற்றி அவர் கூறுங் கருத்துகளை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீயும் அவற்றை ஒதுக்கிவிடுவது தான் நல்லது; நாட்டுக்கும் நல்லது. மொழிப்பற்று முன்னேற்றத்தின் முதற்படி, முதற்படியில் கால் வைக்கக் கூச்சப்படும் ஒரு நாடு. முன்னேறிச் செல்ல விரும்புவது பேதைமையாகும். காந்தியடிகள் தாய்மொழி யைப் பற்றி மேலும் கூறியிருப்பதை, இங்கே உனக்கு நினைவுபடுத்துகிறேன். 'தாய்மொழியை ஒருவன் மதியாமல் இகழ்வது, தன்னுடைய தாயை இகழ்வது போன்ற அவ்வளவு கண்டிக்கத் தக்க செயலாகும். தாய்மொழியை இகழ்பவன் தேசபக்தன் என அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்லன். நம்மொழிகள், ஆழ்ந்த கருத்துகளையும் சிந்தனை களையும் வெளியிடுவதற்குப் போதுமான அளவு வளம் பெற்றிருக்கவில்லை என்றால், அது மொழிகளின் குறையன்று; வளம் பெறச் செய்வது, அம்மொழிகளைப் பேசுகின்றவர்களுடைய பொறுப்பாகும். ஆங்கிலத்தின் வாயிலாகத்தான் உயர்ந்த சிந்தனைகளை வெளியிட முடியும் என்று கருதிக் கொண்டு நம்முடைய மொழியை வளப் படுத்தத் தவறிவிட்டால், நாம் என்றென்றும் அடிமைகளாகவே இருப்போம்” எனக் காந்தியடிகள் கூறிய பொன்மொழி களைப் புறக்கணித்து விட்டுப் புலம்புவது நமக்கு முறையன்று. டாக்டர் வின்சுலோ என்ற அறிஞர், 'தமிழ், கிரேக்க மொழியைவிட மென்மையும் திட்பமும் வாய்ந்தது; இலத்தீன்