பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... களிப்பும் நிறைந்த புதியதோர் உலகைப் படைக்க முனைதல் வேண்டும். இம்முயற்சிகளில் ஈடுபடுவதும், ஈடுபடுவோர்க்கு ஒத்துழைப்பு நல்குவதும் நாட்டுப் பற்றாகும். இவற்றிற்குக் குந்தகம் ஏற்படுத்தினால் அது 'தேசத்துரோகம், ஆகும். அண்டை நாடுகளின் தாக்குதல்கள் ஏற்படுங் காலத்து மக்கள் பிளவுபட்டு நிற்றல் கூடாது; ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தங்களுக்குள் பகையுணர்ச்சி, கட்சிப் பூசல் தலைகாட்ட விடுதல் தகாது. ஒற்றுமை யுணர்ச்சியும், பொது எதிரியை ஒழிக்க வேண்டு மென்ற ஒரே கொள்கையும் மேலோங்கி நிற்கவேண்டும். இவ்வாறு நிற்பவர்தாம் தாயகத்தைக் காப்பவராக, நாட்டுப்பற்றுடையவராக விளங்க முடியும். நாடு பிடிக்கும் ஆசையால் சூழ்ந்து வரும் பகை முடித்தல் ஒன்றுதான், தாயகத்தைக் காக்கும் தொழிலாகக் கருதப்படும் என எண்ணி விடாதே. நாடு கெடுக்கும் நயவஞ்சகப் போக்கினையும் தன்னலமொன்றே கருதும் சுயநலப் பாங்கினையும், காட்டிக் கொடுக்கும் கேட்டுக் குணத்தையும் அறவே ஒழித்துக் கட்டுவதும் தாயகம் காக்குந் தொழில்தான். இதுவே சிறந்த காப்பும் ஆகும். இது மக்களாட்சிக் காலம்; எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்னுங் கோட்பாடு மலர்ந்துள்ள காலம். அவ்வாறாயின் நாட்டைக் காக்கும் பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியதாகிறது. அப்பொறுப்புணர்ச்சி வாய்க்கப் பெறுவதெவ்வாறு? அவனவன் தன்னைத்தானே திருத்திக் கொள்ள வேண்டும். அரசுக்கோ, அரசின்