பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(220 — --- அன்புள்ள ಙD - --- சூழ்நிலை வருவதை அறிந்துங்கூட நன்றி மறந்து ஒடிவிடவில்லை. தாயை மறந்தான்; தம்பியரை மறந்தான்; தனக்கு வரப்போகும் பெரும்பேற்றை மறந்தான். ஆனால், நன்றியை மட்டும் மறக்கவில்லை. கைம்மாறு கருதாமல் துரியோதனன் செய்த நன்றிக்காகப் போர்க்களத்திலே தன்னுயிரையுங் கொடுத்தான் கன்னன். அவன் நன்றியை மறக்கவில்லை. அதனால் உலகமும் அவனை மறக்கவில்லை. நன்றி மறவாமை வேண்டும் என்பதற்காக இவன் கதையை எழுதினேன். நல்லது செய்தவரை உயிருள்ள வரை நினைதல் வேண்டும். 'உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை’ என்பது நமது பழமொழியல்லவா ? நல்லது செய்தவர்க்கு அல்லது செய்யும் பேதையரும் இருக்கத்தான் செய்கின்றனர். நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு, அடிமரத்தை வெட்டும் அறிவிலிகட்கும் இவர்கட்கும் வேறுபாடேயில்லை. "நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்ல தன்றே மறப்பது நன்று”. இங்ங்னம் அறிவுடை நம்பி