பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எனக்குப்பின் ... | *திராவிட நாட்டின் கவிஞன் - வானம்ப்ாடி முடியரசன் : கவிஞர் -பாவேந்தர் முடியரசன்' பாரதிதாசன் - பேரறிஞர் அண்ணா மகாகவி பாரதியார் - பாவேந்தர் பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதலாவது இடத்தைப் பெற்றவர் கவிஞர் முடியரசன். "எனது மூத்த வழித்தோன்றல் முடியரசனே" என்று பாவேந்தராலேயே பாராட்டப் பெற்ற பெருமையுடையவர். ஆழ்ந்த புலமைமிக்க இக் கவிஞர் அழகும் இனிமையும் புதுமையும் கொஞ்சிக் குலவும் ஏராளமான கவிதைகளை எளிய நடையில் இயற்றித் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். இலக்கிய உலகில் சிங்கம் போல உலவக் கூடியவர்கள் உண்மையான கவிஞர்கள். அந்த அபூர்வ இனத்தைச் சேர்ந்த கவிஞர் முடியரசன் எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க்காத ஆண்மையாளர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை மனிதரிடையே பேதாபேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துக்களை எதிர்த்து, கவிதைகள் மூலம் ஓயாத அறிவுப் போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என்பதைக் கவிதைகளால் முரசறைந்தவர். அரசவைக் கவிஞர் என்ற பதவி மட்டும் இருந்திருக்குமானால் அதில் அமர்ந்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதற்கான தகுதிகள் அனைத்தும் உடையவர். தமிழ் உலகத்தின் ஓர் அபூர்வப் படைப்பாளி அற்புதக் கவிஞர். மரபு வழுவாமல், அதே சமயத்தில் புதுமை பூத்த இனிய கவிதைகளைக் காலத்தின் தேவைகளுக்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் சுரந்து அளித்துவந்த செந்தமிழ் ஊற்று முடியரசன். தினமணி தலையங்கம் 5-12-98