உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - ੋਂ அன்புள்ள இளவரசனுக்கு ெ - வேண்டிய மாணவர் என்றெல்லாம் பிரித்துணர்கின்றனராம். அதனோடு நின்றாரல்லர். அதனடியாக நன்மை தீமைகளும் இயற்றுகின்றனரர்ம். இத்தகு கீழ் மைக்குணம் ஆசிரிய உலகில் புகுவது, வருந்தத் தக்க தோடன்றி வெறுக் கத் தக்கதும் ஆகும். என் செய்வது ? எவ்வளவு கற்பினும் பண் பாடில்லையே பண் பட்ட கல்வி என்று வருமோ ? ஆசிரியர் இவ்வாறிருந்தால் இவர் பாற் பயிலும் மாணவ ரிடையே நற்பண்புகள் எங்கே வளர முடியும் ? ஆசிரியத் தொழில் 'புனித மானது என்று நான் எண்ணிக் கொண்டி ருக்கிறேன். அது நிற்க, நீ எந்த ஆசிரியரை விரும்புகிறாயோ அது மற்ற ஆசிரியருக்குத் தெரிதல் வேண்டா. உண்ணும் நேரத்தில் உண். உறங்கும் நேரத்தில் உறங்கு. விளையாடும் நேரத்தில் விளையாடு. மாறி எதையும் செய்யாதே. உடல் நலத்தை நன்கு பேணிக் கொள். நாட்டுள் ஒருவர் நாம்; நம்மால்தான் நாடு என்ற எண்ணம் எப்பொழுதும் நெஞ்சில் இருக்கட்டும். ஒவ்வொருவருடைய கல்வியும் பண்புந்தாம் நாட்டை உயர்த்துகின்றன. உன் தந்தை, 1.8.1956 முடியரசன்