பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 30 அன்புள்ள இளவரசனுக்கு -) வாய்க்கும் ? துயில் எழுதல் முதல் துயிலச் செல்லும் வரை நிகழும் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் விரவி நிற்கின்றது. இன்ன இன்ன செயலை இன்னின்னவாறு ஆற்றுவதென வரை ஆறுத்துக் கொண்டு நாடொறும் வழுவாது ஒழு கி வருஆதான் ஒழுக்கம். அவ்வொழு க்கம் வழுக்கினால் இழுக்கம் ஏற்படும். இழுக்கத்திற்கு இடங்கொடாதே. எழுதல், நீராடல், உண்ணல், உறங்கல், உடுத்தல், படித்தல், பேசல், பழகல் இவ்வனைத்திலும் ஒழுக்கம் உடையவனாக இரு. இருப்பி ன் நல் வாழ்வு உன்னைத் தேடிவந்தடையும். விழுப்பமும் நல்கும். ஆதலால் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காத்துக் கொள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை பற்றி எழுதி யிருந்தாய். ஆசிரியர் பலரைப் பாராட்டி எழுதியிருந்தாய். ஒரிருவர் கற்பிக்கத் தெரியாமல் தடுமாறுகின்றனர் என்றும் எழுதியிருந்தாய். அதனோடமையாது, அவர் பாடம் நடத்துவது ஒரே போர் மயமாக இருக்கிற தென்று எழுதியிருக்கிறாய். இந்தப் போர் என்ற சொல்லைக் கண்டதும் மிகமிக வருந்தினேன். உன்னைக்கூட மனத்திற் கடிந்து கொண்டேன். இனிமேல் அவ்வாறு எழுதாதே; எண்ணவுஞ் செய்யாதே. கல்லூரி மாணவர் சிலர், இச் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதைக் கேட்டிருக்கிறேன். கேட்கும் பொழுதெல்லாம் ஆறாத் துயரங் கொள்வேன். ஆசிரியர் நிலையும் மாணவர் நிலையும் இவ்வாறு போய்க் கொண்டிருக்கிறதே, கல்வி நிலை என்னாவது ? நாட்டின் எதிர் காலம் என்னாவது ? என நினைத்து நினைத்து கவல்வேன். િ |%