உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s32 T -இன்புள்ள இளவரசனுக்குெ வேற்றுமை, தக்கார் பலராகவும் தகார் ஒரிருவராக அருகியும் காணப்பட்டனர் அன்று. இன்றோ தகார் பலராகப் பெருகியும் தக் கார் சிலராக அருகியும் காணக் கிடக் கின்றனர். எப்படியோ தகுதியும் திறமையும் அற்றவர் கல்வியுலகில் புகுந்து விடுகின்றனர். தாங்குரை (சிபாரிசு) ஒன்றுதான் அவர் பெற்ற தகுதி. வேறு அலுவல் கிடைக்கப் பெறாதோர், இங்காவது செல்வோமே என்று ஆசிரியர் உலகில் வேண்டா வெறுப்பாக நுழைகின்றனர். அந்தோ! அவர் என் செய்வர் ? வாங்கும் ஊதியத்திற்காக ஏதேனும் உளற வேண்டுமே என்று திருவாய் மலர்ந் தருளுகின்றனர். விருப்பின்றி இப்பணியை ஏற்பதால் வேலையில் பழுதுகள் விளைகின்றன. அதனால் ஆள்வோர் முதல் ஆண்டின வரை ஆசிரியர்களை ஏசுகின்றனர். ஏன் ? மாணவர்களே கண்டபடி பேசுகின்றனரே! என்செய்வது ? இவற்றை யெல்லாம் ஆளும் நல்லவர்களல்லவா உணர வேண்டும். அவர்களுக்கல்லவா இந்த அக்கறை வேண்டும் ? அக்கறை அவர்களுக்கு வரும் வரை மாணவர்தாம் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். எந்த ஆசிரியர் எப்படி நடத்தினாலும் அவற்றைக் கூர்ந்து கேட்க வேண்டும். எவரிடத்தும் ஒன்றிரண்டு நல்லன இருந்தே திரும். அந்நல்லனவற்றை நாம் ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் சிறக்க முடியும். இன்றேல் பயனில்லை. எவரிடத்தும் கீழ்ப் படிந்து படிப்பதுதான் படிப் போர் கைக் கொள்ள வேண்டிய ஒழுக்கம். *