பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - ==नाः அன்புள்ள இளவரசனுக்குெ செடிகளும் உண்டு. பின் பக்கம் பெரிய தென்னந்தோப்பு, அத் தோப்பில் பாக்கு மரங்களும் தென்னையோடு போட்டியிட்டு வளர்ந்திருக்கும். அக் கமுக மரங்கள் அணி வகுத்தாற் போலத் தோப்பின் இடையில் இருமருங்கும் ஒரே வரிசையாக நெடுந்துாரம் காணப் பெறும். அவ் வணிவகுப்பின் இடையே நானும் என் நண்பர்களும் நடந்து செல்லுங்கால், என் இரு மருங்கும் படை அணி வகுத்து நிற்பதாகவும் உடன் வருவோர் அய்ம்பெருங் குழுவினராகவும், நான் மூவேந்தருள் ஒருவராக முடியரசராக அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளுவ தாகவும் கற்பனை செய்து கொண்டு பெருமிதத்துடன் நடந்து செல்லுவேன். அக் குற்றாலம் என்னை அவ்வாறெல்லாம் எண்ணச் செய்தது. தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் போது, குற்றாலத்தை நெருங்கியதும் நமக்கு இடப்பக்கமாக ஒரு வழி பிரியும். அவ்வழியே கின் சிறிது தொலைவில் உள்ள புலியருவியை அடையலாம். இஃது இப் பெயர் பெறக் காரணம் தெரியவில்லை. அவ் வருவி, பெண்களும் ஆண்களும் தனித்தனி நீராடுவதற்காக நன்முறையில் செப்பஞ் செய்யப்பட்டிருக்கும். ஆதலின் அருவியின் செயற்கையமைப்பையே காண் பாய். அருவி, மூன்று கிளையாகப் பிரிந்து வீழுமாறு அமைக்கப் பெற்றிருக்கும். அருவி வீழும் இடத்திற்கு அருகில் கேணி போன்றதொரு தொட்டியிருக்கும். அத் தொட்டி நிரம் பித் தண் ணி ர் வழிந்தோடும்.