பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52T அன்புள்ள இளவரசனுக்கு ... யென்றும் இடையே பேரருவியென்றும் கீழே இறங்குகிறது போலும். தேனருவியிலிருந்து இறங்கும் பொழுதும் எச் ரிக்கையாக இறங்க வேண்டும். இறங்கி வரும்பொழுது மலை மேலிருந்து நிலத்தைப் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய மட்டும் ஒரே பசுமையான காட்சி ! தரையே தெரியவில்லை. எங்கும் பசுமையான வயல்கள். உயரத்திலிருந்து பார்ப்பதால் வரப்புகள் புலனாகவில்லை. ஒரே வயல் போலத் தோன்றியது அதைச் சுற்றிலும் உயர்ந்த தென்னந் தோப்புகள். இக்காட்சி ஒரு பெரிய ஏரிபோற் காணப்பட்டது. உயர்ந்த தோப்புகள் பெரிய கரை போலவும் நடுவே அமைந்த வயற்பரப்பு நீ நிலை போலவும் காற்றில் துவளும் நாற்றுகள் நீர்ப்பரப்பிற் படிந்து படிந்து செல்லும் அலைகள் போலவும் காட்சியளித்தன. சிறிது நேரம் நின்றபடியே அவ் வெழிலை கை புனை தியற்றாக் கவின் பெறு வனப்பைக் கட்புலனாற் சுவைத்துச் கொண்டிருந்தேன். இறங்கு கையில் அங்குக் கிடக்கும் பல வகைப் பாறைகள், செய்து வைத்தன போல விந்தை காட்டின. அனைத்தும் கை புனைந்தியற்றாதனவே. சில கற்கள் வடித்தெடுத்த இலிங்கர்கள் போற் காணப்பட்டன அவற்றைக் கண்டதும் இலக்கியச் செல்வர் இராய. சொக்க லிங்கனார் எழுதிய குற்றால வளம்’ என்ற கட்டுை நினைவுக்கு வந்தது. அவர் அக்கட்டுரையில், நமது புராண உலகத்தார் சில தல இலிங்கங்கள் உளியினாற் செய்ய படாதன என்று பெருமை கூறுகின்றனர் அல்லவா ? அவை இன்ன மலைகளில் இயல்பாகக் கிடந்து கொணர பட்டனவாகவே இருத்தல் வேண்டும்’ என்று கூறுகின்றார்