பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசர் அரசன்-7) - - - - ---- - - == - அமர்ந்துள்ளனரே, இத்தகு பாடல்களைப் பாடலாமா ான்று எண்ணாராய் நாண மின்றிக் கூத்தாடினர், நீயும் கல்லூரியில் பயில்வதால் உனக்கு வருத்தமாக இருக்கலாம் இவ்வாறு எழுதுவதால். ஆனால் அவர்கள் அவ்வாறு கண்ணியக் குறைவாக நடப்பதால் யாருக்குக் கேவலம் ? அவர்கள் பயிலும் கல்லூரிக்கே கெட்ட பெயர் தானே ? பண் பாடில் லாத இவர்கள் படித்து, வெற்றி பெற்று, நாட்டுக்கு என்ன செய்து விடப் போகிறார்கள் ? இவர்களால் நாட்டுக்கு நல்ல பெயர் கிட்டுமா ? என்றுதானே பார்ப்பவர் கருதுவர். கருதுவ தென்ன சொல்லவே செய்தார்கள். என் காதாரக் கேட்டேன். மாணவப் பருவம் பலவகையான கேளிக்கைகளுக்குரிய பருவந்தான். எனினும் அதற்கும் ஒரளவு வேண்டுமல்லவா ? அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சுதானே ! மாணாக்கர் என்ற சொல்லுக்கே மாண்பை ஆக்குபவர்கள் என்று பொருள். அதனால் மாண்பை ஆக்க வேண்டுமே தவிர மாண் பைப் போக்கி விடக் கூடாது. அதனால் நீங்கள் செல்லும் பொழுது பெருந்தன்மை யுடன் நடந்து, உங்கள் கல்லூரிக்கும் நாட்டுக்கும் நற்பெயர் உண்டாக்குங்கள். சில கல்லூரி மாணவர்கள் எவ்வளவு பெருந்தன்மையாகவும் தொண்டு மனப்பான்மையுடனும் நடந்து கொள்கிறார்கள் தெரியுமா ? அத்தகையோரைக் காணும் பொழுதெல்லாம் என் அகங்குளிரும், முகம் மலரும், அவ்வாறு நீங்களும் நடந்து கொள்ளுங்கள். தம்பி, குற்றாலத்துக்கு அருகில் பம்புளி என்ற பெயர் தாங்கிய ஒர் ஊருண்டு. அதைப் பற்றி மட்டும் எழுதிக் கடிதத்தை முடிக்கின்றேன். சொற்களை