பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள இளவரசனுக்கு. திருக்குறட் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டும், கடித வடிவில் எழுதப்பெற்றுள்ளது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கட்குப் பாடநூலாக வைக்க வேண்டிய நூல் இது. பாடநூலாக வைப்பின், மாணவர்களிடையே ஒழுக்கம், பண்பாடு, நாட்டுப்பற்று ஆகியவை வளர இந்நூல் பெரிதும் உதவும் என்பது திண்ணம். நாட்டு நலன் நாடுவோர் இதனை ஆதரிப்பது கடமை பல்லவா? நாட்டு நலன் கருதி இந்நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்தாருக்கு எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள் கின்றேன். என் தந்தையார் நூல்கள் வெளிவர உறுதுணையாக இருக்கும் பேராசிரியர் முனைவர் இரா. இளவரசு அவர்களுக்கும், வாடி நின்ற முல்லைக்கு வள்ளலின் தேராய் வந்த தமிழ் மொழிக் காவலர் கோ. இளவழகனார் அவர்களுக்கும் நான் என்றும் கடப்பாடுடையன். 19, மூன்றாம் விதி, அன்பன், காந்திபுரம், மு. மாரி. காரைக்குடி - 630 001.